இந்தியா

உத்தரகாண்டில் 3வது நாளாக தொடரும் மீட்பு பணி

உத்தரகாண்ட் மாநிலத்தின், உத்தரகாசி – ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கீர் கங்கா ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. 

அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 

அதில் ஒரு கிராமமே வௌ்ளத்தில் மூழ்கிய நிலையில் சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இணைந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதுவரை 650 பேர் மீட்கப்பட்டு உள்ளதுடன், 50 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

200 க்கும் மேற்பட்ட வீரர்கள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 3வது நாளான இன்று உலங்கு வானூர்தி உதவியுடனும் மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…