No products in the cart.
வசூல் சாதனையை முறியடிக்குமா கூலி?
தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து 2023ல் வெளிவந்த ‘லியோ’ படம் சாதனையை வைத்துள்ளது.
அப்படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி. அதேசமயம் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக விஜய் நடித்து 2022ல் வெளிவந்த ‘பீஸ்ட்’ படம் 35.8 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.
தற்போது அந்த இரண்டு சாதனைகளும் முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி முன்பதிவில் மட்டும் 65 கோடி வசூலைப் பெற்றிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாக இன்றுடன் சேர்த்து இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.
அவையும் ஆரம்பமாகிவிட்டால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் ஆன்லைன் முன்பதிவு நிலவரத்தைப் பார்க்கும் போது முதல் நான்கு நாட்களுக்கு நிறையவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாள் வசூல் சாதனையுடன் சேர்த்து முதல் வார இறுதி நாட்களின் வசூலும் சாதனை புரிய வாய்ப்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.