உலகம்

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த ChatGPT நிறுவனம்

உலகமெங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது அப்டேட்களை ஏஐயில் வெளியிட்டு வருகின்றன. 

சந்தையில் முதலிடத்தை பிடிக்க ஒருபக்கம் போட்டி நடக்கும் நிலையில், இதற்காக தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டெக் ஊழியர்களை தங்கள் நிறுவனங்களுக்கு இழுக்க முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. 

அந்த வகையில், மெட்டா, குரோக் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து பணியாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால், தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைக்க ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனஸ் தொகையை கொடுத்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இதனால், ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனனர்.

What's your reaction?

Related Posts

6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம்,…