No products in the cart.
சிறுத்தை புலிகள் காரணமாக மக்களிடையே அச்சம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குகைக்குள் இரண்டு சிறுத்தை புலிகள் வாழ்ந்து வருவதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தொழிலுக்காகச் செல்லும் தொழிலாளர்கள் இந்த சிறுத்தைகளை கண்டதாகவும், இதனால் தேயிலை கொழுந்து பறிக்கச் செல்வதற்கு அச்சமடைவதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக, காலை வேளைகளில் கற்குகையிலிருந்து சிறுத்தைகள் வெளியேறி நடமாடுவதாகவும், இதனால் தொழிலாளர்கள் பயத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சிறுத்தைகளால் கடத்தப்படுவதாகவும், அப்பகுதியில் நாய்களின் எலும்பு எச்சங்கள் காணப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த சிறுத்தை புலிகளின் நடமாட்டம் தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.