சினிமா

2 ஆம் நாளில் கட கடவென கம்மியான வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜுனா, சோபின் ஷாஹிர், சார்லி, ரச்சிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதுதவிர பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 14 ஆம் திகதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது.

ஓவர் ஹைப்போடு ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக பயங்கர அடிவாங்கி இருக்கிறது. இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனர் என்கிற இமேஜுடன் வலம் வந்த லோகேஷ் கனகராஜுக்கு முதல் தோல்விப் படமாக கூலி அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் திரைக்கதையில் ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருப்பதால், கூலி படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வழக்கமாக ரஜினி படம் என்றால் ஃபேமிலி ஆடியன்ஸ் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸும் குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை உள்ளது.

கூலி படம் முன்பதிவிலேயே மாஸ் காட்டியதால் இப்படம் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே முதல் நாளில் ரூபா 151 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையை கூலி படைத்தது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த லியோ படம் ரூபா 148 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை கூலி முறியடித்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியது லோகேஷ் கனகராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி கூலி திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் பயங்கர அடிவாங்கி உள்ளது. முதல் நாள் 151 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் வெறும் 80 கோடி தான் வசூலித்துள்ளது.

இத்தனைக்கும் நேற்று சுதந்திர தின விடுமுறை நாளாக இருந்தும் இப்படம் வசூலில் அடிவாங்கி இருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூபா 53 கோடி வசூலித்துள்ளதாம். முதல் நாளில் இந்தியாவில் 65 கோடி வசூலித்த இப்படம் இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் 118 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் இப்படம் 230 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாளாக இருந்தாலும் இப்படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…