No products in the cart.
ஒக்கம்பிட்டிய OIC யின் பிணை மனு நிராகரிப்பு
மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் மகள் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், அதை ஒரு சிறப்பு விடயமாகக் கருதி சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
எனினும், சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால், பிணை மனுவை எதிர்ப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, அவரை 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.