No products in the cart.
அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது!
இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே முத்தையன்கட்டு இளைஞனின் மரணம். இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை என என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதை போன்று மக்கள் மத்தியில் இராணுவ பிரசன்னம் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தான் இராணுவத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இதனை நாங்கள் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம்.
இராணுவத்தினரின் இடையூரின் ஒரு விளைவுதான் இந்த இளைஞனின் துரதிஸ்டவசமான மரணம்.இராணுவ முகாமிற்குள் அனுமதியன்றி நுழைந்தார்கள்.அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது.
இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே இது. இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை.கடந்த 15 ஆண்டுகாலமாக இந்நிலைமையே காணப்படுகிறது. இதனையே தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம்.சுட்டிக்காட்டுகிறோம் என தெரிவித்தார்.