No products in the cart.
வௌியான அதிரடி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படம் மட்டும் படமாக்கப்பட்டால் தமிழ் சினிமாவிற்கே கொண்டாட்டம் தான். ஆனால் கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால். லோகேஷ் அவரது அடுத்த பட கதை மற்றும் திரைக்கதை பணியில் கூடுதல் கவனம் மற்றும் நேரம் ஒதுக்க வேண்டும்.