அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கக்கிசோ ரபாடா விலகியுள்ளார்.
அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரபாடாவுக்கு ஏற்பட்டிருந்த காயம் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து தென்னாபிரிக்க வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபாடா இந்த தொடரில் இருந்து விலகியதன் பின்னர், அவருக்கு பதிலாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.