No products in the cart.
அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – சபாநாயகரின் அறிவிப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.