No products in the cart.
திரைக்கு ‛கிஸ்’ வரும் திகதி அறிவிப்பு
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் கவின். இவர் நடித்த ‛லிப்ட், டாடா’ படங்கள் வெற்றி அடைந்த நிலையில் கடைசியாக வெளிவந்த ‛பிளடி பெக்கர்’ படம் சரியாக போகவில்லை.
இந்த படத்திற்கு பின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ‛கிஸ்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.
அவருக்கு ஜோடியாக ‛அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.
இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது.
இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் செப் 19 ஆம் திகதி இந்தப் படம் வௌியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛மதராஸி’ படம் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வௌியாவதால் இந்த படத்தை 19 ஆம் திகதி வெளியிடுகின்றனர்.
பிளடி பெக்கர் படம் தோல்வியால் கிஸ் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் கவின்.