No products in the cart.
ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு இதற்கான மாஸ் அறிவிப்பு வெளிவந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், சுராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, ஜெயிலர் 2 படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு விக்ரம் நடித்து வெளியான வீர தீர சூரன் படத்தில் வில்லன் காதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.