No products in the cart.
பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை
பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அத தெரண வினவிய போதே, அந்த தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக பண்டார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இதுவரை எந்த கலந்துரையாடலையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.
தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு தபால்மா அதிபர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு கலந்துரையாடலில் ஈடுபட தமது சங்கத்தினர் தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது வரை சுமார் 17 இலட்சம் கடிதங்கள் தபால் நிலையங்களில் குவிந்துள்ளதாக சிந்தக பண்டார தெரிவித்தார்.