இலங்கை

யாழ்ப்பாணத்தில் பாடகர் மனோவிற்கு ஏமாற்றம் ; திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (23) நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் . மண்ணே வணக்கம்” எனும் இசை நிகழ்வில் , தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ , சைந்தவி , கார்த்திக் , தீப்தீ , இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர் .

இசை நிகழ்வுக்காக  கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மாலை மாபெரும் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் , திடீரென இசை நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இசை நிகழ்வுக்காக 10 ஆயிரம் ரூபாய் , 5 ஆயிரம் ரூபாய் , 3ஆயிரம் ரூபாய் மற்றும் 1500 ரூபாய் ஆகிய விலைகளில் நுழைவு சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் , நிகழ்வு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் எனவும் , அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். 

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…