சினிமா

குடும்பங்களின் வெற்றி – உலகளவில் 100 கோடி வசூல்!

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52 ஆவது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மகாராஜா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு இப்படம் பிளாக் பஸ்டராக அமைந்துள்ளது.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…