இலங்கை

ரணிலின் உடல்நிலை குறித்து தற்போது வெளியான அறிவிப்பு! உணவு – தண்ணீர் இன்மையால் ஏற்பட்ட ஆபத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலைக் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் வைத்தியர் பெல்லன்ன தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய நிலைக்குக் காரணம், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 10  மணிநேரத்திற்கும் அதிகமாக வெப்பத்தில் நீதிமன்றத்தில் காத்திருந்தமையாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பிட்ட நேரத்தில்,  அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காமையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் வைத்தியர் கூறினார். 

வைத்தியர் ருக்சான் பெல்லன்ன முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலைக் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

 முன்னாள் ஜனாதிபதி ரணில்  தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார், மேலும் நீர்ச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருகிறார். பல சிறப்பு மருத்துவக் குழுக்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

நீர்ச்சத்து குறைபாடு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது சிறுநீரகங்கள், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த ஆபத்தைத் தடுக்க அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சரியான சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு முதல் மூன்று நாட்களில் குணமடைந்து சாதாரணமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு  நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது  என குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…