இலங்கை

நுவரெலியா தபால் நிலையத்திற்குள் மீண்டும் வௌிநாட்டவர்!

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. 

அதேநேரம், தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தமையினால் தபால் சேவை பெற தபால் நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

இந்நிலையில் நேற்றுடன் (24) தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்த நிலையில், இன்று நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் வழமை போல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. 

இதனிடையே கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுற்றுலாத்தளமாக விளங்கும் நுவரெலியா தபால் நிலையத்தின் உட்பகுதியை பார்வையிடவும், சேவைகளை பெற்றுக்கொள்ளவும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 

எனினும் மீண்டும் இன்று சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்திற்குள் பார்வையிட்டதுடன், தங்களது சேவைகளையும் இன்று பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…