No products in the cart.
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது!
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் கடந்த 21 நாட்களில் 16 தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.