கனடா

கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர் கண்ணீர்

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகனை இழந்து கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை!

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். \

அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ். கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், Scarborough டவுன் சென்றரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டது தங்கள் மகன் டானியல் என்பது.

பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…