No products in the cart.
லண்டனில் அகதிகள் தொடர்பான தீர்ப்பு; கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம்!
லண்டனில் அகதிகள் விடுதியில் தங்குவது குறித்து பிரிட்டன் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் , இந்த முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் மேலும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம் லண்டனில் அகதிகளை வெளியேற்ற வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில், அரசின் இந்த முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள ‘பெல் ஹோட்டல்’-லில் இருந்து அகதிகளை வெளியேற்ற வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
அகதிகளை தங்க வைப்பதற்கான இடப்பற்றாக்குறை மற்றும் வெளியேற்றத்தில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது அரசின் கொள்கைகளுக்கு வலுசேர்த்தாலும், பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அகதிகள் விவகாரத்தில் அரசுக்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது. அகதிகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு வெளியே வன்முறை மற்றும் அமைதியின்மையுடன் கூடிய போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தத் தீர்ப்பு, அந்தப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கலாம் என அரசு எச்சரித்துள்ளது.
அகதிகள் விவகாரம், பிரிட்டனின் அரசியலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில் நீதிமன்ற தீர்ப்பு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.