கனடா

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் காலமானார்

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் தனது 73ம் வயதில காலமானார்.

நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்டாரீயோவின் ஸ்ட்ராட்ஃபோர்டு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் வாழ்நாள் கலை சாதனைகளுக்கான கவர்னர் ஜெனரல் விருது பெற்றிருந்த கிரீன், 2015 ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் கனடா விருதையும் பெற்றிருந்தார்.

1990 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் வெஸ்டர்ன் திரைப்படமான டான்ஸ் வித் வுல்வ்ஸ் “Dances With Wolves” இல் “கிக்கிங் பறவை” என்ற கதாபாத்திரத்திற்காக அவர் ஆஸ்கர் விருதிற்கான பரிந்துரை பெற்றார்.

அத்திரைப்படம் கெவின் காஸ்ட்னர் இயக்கத்தில் வெளியானது என்பதுடன் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்றது. ஓன்டாரியோவின் ஓஷ்வெகன் நகரில் பிறந்த கிரீன், சிக்ஸ் நேஷன்ஸ் ரிசர்வ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970களின் இறுதி காலம் முதல் தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் அவர் நடித்த “Seeds” (2024) என்ற நகைச்சுவை-த்ரில்லர் திரைப்படம், அவருக்கு கனேடியன் ஸ்கிரீன் விருது பெற்றுத் தந்தது. அதேபோல் FX நிறுவனத்தின் பிரபல தொடர் ரிசவேசன் டோக் “Reservation Dogs” இல் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டை ஹார்ட், தி கிரீன் மைல் மற்றும் மாவிரிக் போன்ற ஹாலிவுடன் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…