விளையாட்டு

பிரித்வி ஷாவுக்கு 100 ரூபாய் அபராதம்!

இந்திய அணி கிரிக்கெட் வீரரான பிரித்வி ஷா. டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டபோது இவருக்கும், சப்னா கில் என்ற பெண்ணின் நண்பருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

சப்னா கில்லின் நண்பர், பிரித்வி ஷாவுடன் செல்பி எடுக்க கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தில் இருந்து வெளியேறும்போது, தகராறு முற்றி அடிதடியில் முடிவடைந்துள்ளது. பிரித்வி ஷா காயமின்றி தப்பினார். ஆனால், சப்னா கில் நண்பன் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

சப்னா கில் மற்றும் அவருடன் மேலும் சிலர் பிரித்வி ஷாவின் நண்பரை பின்தொடர்ந்து 50,000 ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனடிப்படையில் புகார் அளிக்க சப்னா கில்லை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கிடையில் பிரித்வி ஷா தனக்கு உடல் ரீதியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக சப்னா கில் புகார் அளித்தார். இதனடிப்படையில், பொலிஸார் வழக்கப்பதிவு செய்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் சப்னா கில் முறையீடு செய்தார். 

சப்னா கில் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மும்பை செசன்ஸ் கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் பிரித்வி ஷா பதில் அளிக்காமல் இருந்தார். கடந்த விசாரணையின்போது இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி இருந்தும் பிரித்வி ஷா விளக்கம் அளிக்கவில்லை. 

இதனால் நீதிமன்றம் பிரித்வி ஷாவுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், அடுத்த விசாரணையின்போது கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த விசாரணையை டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…