No products in the cart.
இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று
சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் யஸஸ்வி ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களுடனும், ஆகாஷ் தீப் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களையும், இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
இதனடிப்படையில் இங்கிலாந்து அணியை விட, இந்திய அணி 52 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.