இலங்கை

மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மீட்பு

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன. 

பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…