இலங்கை

சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொலை!

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் நேற்று (04) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…