கனடா

அல்பெர்டாவில் 5 வயது சிறுவனை காணவில்லை

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள க்ரவுஸ்நெட் பாஸ் Crowsnest Pass பகுதியில் வார இறுதியில் 5 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

இந்த சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடிவருகின்றன.

டேரியஸ் மக்டகல் (Darius Macdougall) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுவன் தனது குடும்பத்தினருடன் ஐலண்ட் லேக் கேம்ப்கிரவுண்ட் Island Lake Campground அருகே முகாமிட்டிருந்தார்.

அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில், சகோதரர்கள் ஆறுபேருடன் சிறிது தூரம் நடந்து சென்றபோது குழுவிலிருந்து பிரிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேரியஸ் திரும்ப வராததை கவனித்த குடும்பம் முதலில் தாங்களே தேடியபின் 911க்கு அழைத்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல ஆறுகள், ஓடைகள் காணப்படுவதனால் தேடுதல் சிக்கலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் நிதானமாகவும் முழுமையாகவும் தேடுவதாகவும், 24 மணி நேரமாக தேடுதல் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதலில் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில் இருந்து வந்த தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள், ட்ரோன்கள் (thermal imaging), நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…