No products in the cart.
கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் விபரங்கள் வௌியானது
மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும் இந்திய பிக்கு ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நிகழ்ந்தபோது கேபிள் காரில் பயணித்த மொத்தம் 13 பிக்குகளில் இருவர் அதிலிருந்து குதித்து தப்பிய நிலையில், மேலும் நான்கு பிக்குகள் படுகாயமடைந்தனர்.
தற்போது காயமடைந்த ஆறு பிக்குகளும் குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.