இலங்கை

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் சாதாரணப் பணிகளுக்காக வைத்திய சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளுக்கு அமைய இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நடைபெற்று வரும் முதற்கட்ட விசாரணைகள் தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…