இலங்கை

பியல் மனம்பேரி மீண்டும் விளக்கமறியலில்

மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரி மற்றும் மின்சார சபை ஊழியர் ஒருவரின் வழக்கு இன்று (22) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வீடியோ தொழில்நுட்பம் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. 

பின்னர், இருவரையும் இந்த மாதம் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு உத்தரவிட்டார். 

மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் உள்ள காணி ஒன்றில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அண்மையில் மீட்கப்பட்டது. 

குறித்து சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…