இலங்கை

‘GovPay’ ஊடாக 750 மில்லியனுக்கும் அதிகமான அரச கொடுப்பனவுகள்

இலங்கை அரச சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ‘GovPay’ முறைமை மூலம், 750 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வரி, அபராதம், பயன்பாட்டுக் கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற சேவை கட்டணங்கள் உள்ளிட்ட அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்காக, வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் இந்தக் கட்டண வசதி மூலம் பணம் செலுத்த முடியும். 

அதன்படி, இன்று (31) வரையான காலப்பகுதியில், 38,378 கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக 760,834,489 ரூபாய் அரச கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

184 அரச நிறுவனங்கள் இந்தச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…