இலங்கை

இந்திய பிரதமர் மோடிக்கு அரச மரியாதை.

இலங்கைக்கு மூன்று நாள்உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 05ஆம் திகதி இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அரச மரியாதை வழங்கும் நிகழ்வில் 19 துப்பாக்கி வேட்புக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான இலங்கை தூதுக்குழுவும் கலந்துகொண்டதுடன், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அரச மரியாதை நிறைவுற்றதும் பிரதமர் மோடி ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுள்ளார்.இங்கு இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

பிரதமர் மோடி நாளை தமது அரசுமுறை பயணத்தை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் , விசேட போக்குவரத்துத் திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…