இலங்கை

லொக்குபெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளதாக அலுத்கம பொலிஸார் தெரிவித்தனர். 

ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் இந்துருவ பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்கள் ‘Easy Cash’முறை மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

வங்கி அறிக்கைகள் மற்றும் தொலைபேசி அறிக்கைகளைப் பெற்று மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுத்துவைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

அலுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…