இலங்கை

இன்று ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை!


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

ஜனாதிபதி மட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…