இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு ஒரே நாளில் 1,115 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்புக்கான ” முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: 

ஹெரோயின்: 531 கிராம் ஐஸ் : 754 கிராம் கஞ்சா: 8 கிலோ 953 கிராம் போதை மாத்திரைகள்: 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள். 

மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…