இலங்கை

ஆதாரங்களுடன் மீண்டும் சஜித் முன்வைத்த விடயங்கள்…

நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது. 

இதன் பிரகாரம், தான் தொடர்பாக சபையில் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. நான் விடயங்களை முன்வைக்கும்போது, ​​நான் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டேன், என்றாலும், நான் உண்மையையே முன்வைத்தேன். நான் பொய் கூறவில்லை. 

பொலிஸ் சான்றிதழைப் பெறும்போது பொது மக்கள் பாதுகாப்புக் குழு அல்லது சிவில் பாதுகாப்புக் குழுவின் கட்டாயப் பரிந்துரை வழங்கப்பட வேண்டும் என்பது பொய்யல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இது தொடர்பாக ஹக்மன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு கடிதங்கள் காணப்படுகின்றன. இந்த கடிதங்களை 280 பி படபத்த எனும் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் யசந்த ஆரியசேன என்பவராலயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் அனைத்தையும் ஹன்சாட் பதிவிடுகிறேன். இதன் மூலம் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது வெளிப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

மாத்தறை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தல் பலகையில் கூட இதுபோன்ற ஒரு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் அறிக்கையைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் சிவில் பாதுகாப்பு குழுவின் கடிதம் தேவை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று காலை குறித்த அறிவித்தல் பலகையில் அந்தப் பகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. தான் உண்மையைச் சுட்டிக்காட்டியதாகவும், நாட்டு மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இந்த உண்மைச்சம்பவங்களை அறிக்கையிட்ட, பேசிய ஊடகவியலாளர்களை இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருப்பது தவறான நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…