இலங்கை

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது


கடந்த சில நாட்களாக மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைந்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மழைவீழ்ச்சி குறைந்துள்ளதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சாதாரண நிலையை அடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இதன் விளைவாக, எந்தவொரு ஆற்றிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

ஈரவலயத்தில் மாத்திரம் சிறிய அளவிலான மழை பெய்து வருவதாகவும், ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் மழையற்ற வானிலை நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

எதிர்வரும் நாட்களில் சாதாரணமான குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளம் அல்லது அது தொடர்பான அபாயங்கள் ஏற்படாது என்று குறிப்பிட்ட அவர், எதிர்கால வானிலை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…