இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, நல்லூர் அரசடிப் பகுதியில் 570 மில்லி கிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…