இலங்கை

மகாவலி ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, மகாவலி ஆற்றுப் படுக்கையைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, மெதிரிகிரிய, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கை சார்ந்த தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியும், சோமாவதி ரஜமஹா விகாரைக்கான நுழைவு வீதியும், சோமாவதி ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அடுத்த சில நாட்கள் வரை சோமாவதிய ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அத்துடன், அப்பிரதேசங்களில் மகாவலி கங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…