இலங்கை

துப்பாக்கி இயங்கியதால் பொலிஸ் சார்ஜன்ட் காயம்

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென துப்பாக்கி ஒன்று இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இன்று (7) காலை துப்பாக்கி ஒன்றை பரிசோதிக்க முற்பட்டபோது, அது தவறுதலாக இயங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மாலபே பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…