இலங்கை

காலி மாநகர சபையில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே மோதல்

காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.

இதன்போது, “திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.

மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…