இலங்கை

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது.

இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர்.

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து பஜனை பாடி, படி பூஜை நடைபெற்றது.

ஐயப்பன் பூஜை இடம்பெற்று ஐயப்பன் பஜனை நடைபெற்ற பின் மஞ்சள் மாத விசேட பூஜை தொடர்ந்து பூஜையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து  சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் நெய் தேங்கை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் நிறைவுபெற்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…