இலங்கை

இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் நேற்று (20) சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…