இலங்கை

தொழில்நுட்பவியலாளர்கள் நாளை நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களில் கதிர்வீச்சை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நாளை பாதிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார். 

கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே, இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மாளிகாவத்தை வைத்தியசாலையில் தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தே அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…