இலங்கை

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி

இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். 

யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இன்று (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். 

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. 

இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…