இலங்கை

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

ஹொரணையில் இருந்து கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஊடாகப் புறக்கோட்டை வரை பயணிக்கும் புதிய பேருந்து ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஹொரணை – கொழும்பு 120-ஆம் இலக்க வீதியிலான சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்து ஊழியர்கள் நேற்று முதல் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்தப் பணிப்புறக்கணிப்பால் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த மேலதிக இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…