இலங்கை

582 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

உடவலவ தேசிய பூங்காவின் கோமகல பகுதியில், கஞ்சாவைப் பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து சுமார் 582 கிலோகிராம் உலர் கஞ்சாவைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுவன மற்றும் மித்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் இன்று (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…