இலங்கை

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும், சம்பள முரண்பாடுகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஆண்டில் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…