இலங்கை

நீர்கொழும்பில் கைத்துப்பாக்கி மீட்பு

நீர்கொழும்பு துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று (7) மாலை முன்னெடுத்த தேடுதலின் போது, குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

பிரதேசத்திலுள்ள கடற்கரை அணுகல் வீதியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 

இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய துன்கல்பிடிய பிரதேசத்தில் கைத்துப்பாக்கி மீட்பு 

7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…