இலங்கை

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி, தலைமையில் கூடியது

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…