இலங்கை

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதி திடீர் மரணம்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, சிறைச்சாலை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நேற்று (21) அந்த கைதி உயிரிழந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

உயிரிழந்த கைதி 45 வயதுடையவர் என அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

இருப்பினும், குறித்த கைதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. 

இதேவேளை, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தங்கியிருக்கும் ஒரு வார்டில் (Ward) காய்ச்சல் பரவி வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ‘அத தெரண’விடம் தெரிவித்தார். 

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 கைதிகள் ஆரம்பகட்ட சிகிச்சைக்காக அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு இந்தக் காய்ச்சல் தான் காரணமா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…